மருத்துவ காப்பீடை மாற்றிக்கொள்வது எப்படி?
மருத்துவ காப்பீடை மாற்றிக்கொள்வது எப்படி? தொலைத்தொடர்பு சேவையை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வதுபோல மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதற்கான வசதியை காப்பீட்டு ஒழங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) கொண்டுவந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வசதி இருந்தாலும், இதன் சாதக பாதகங்கள் பலருக்கும் தெரியவில்லை. மாறுவதால் என்ன பலன்? ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மற்ற நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஒரே மாதிரியான பலன்கள் இருக்கும் பாலிசிகளில் மட்டுமே மாற்ற முடியும். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பாலிசியை, விபத்து காப்பீட்டு பாலிசியாக மாற்ற முடியாது. மேலும் பாலிசியை புதுப்பிக்கும் பட்சத்தில் (அதாவது அடுத்த பிரீமியம் செலுத்தும்போது) மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். இடையே மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்துக்கு மாறும்போது, காத்திருக்கும் காலத்துக்கான பலன்களை பெற முடியும். அதாவது பாலிசி எடுத்தவுடன் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு ...