விந்தணு எண்ணிக்கையை இயற்கை வழியில் அதிகரிக்கும் சில எளிய வழிகள்!
ஒரு மாதிரி விந்துவில் எவ்வளவு விந்தணு உள்ளதோ, அதைப் பொருத்து தான் ஒரு ஆணின் கருவளத்தின் ஆரோக்கியம் சொல்லப்படுகிறது. தற்போதைய உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கை என்பது ஒரு மில்லிமீட்டர் விந்துவில் 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது ஒரு மாதிரியில் குறைந்தது 39 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும். 10 மில்லியனுக்கும் குறைவான அளவில் விந்தணுக்கள் இருந்தால், அது அசாதாரணமாக மற்றும் ஆண்களின் கருவளக் குறைவைக் குறிப்பதாக கருதப்படுகிறது. ஒரு ஆணின் ஹார்மோன்களை பாதிக்கும் எந்த ஒரு விஷயமும், விந்தணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். முக்கியமாக ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் எந்த ஒரு காரணியும், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பெரிதும் பாதிக்கும். தற்போதைய காலத்தில் ஆண்கள் வருத்தம் கொள்ளும் விஷயங்களுள் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. இதற்கு முதன்மையான காரணமே வாழும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். முக்கியமாக இன்றைய ஆண்களது புகைப்பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் தா...