தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும்.
சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
காரணங்கள்
ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன:
* மனக்கவலை : அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது.
* மருந்துகள் : சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தைத் தடுக்கும் மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகளால் தூக்கத்தில் பற்களைக் கொறிக்கலாம்.
* தூக்க பிரச்சனைகள் : தூக்கத்தில் குறட்டை விடுபவர்கள் அல்லது தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள், ஆழ்ந்த தூக்கத்தின் போது பற்களைக் கொறிப்பார்கள்.
தொடர்ச்சி...
* ஸ்லீப் பாராலைசிஸ் : தூங்கும் போது அல்லது எழுந்திருக்கும் போது, தற்காலிக இயலாமைக்கு வழிவகுக்கும் ஒரு நிகழ்வு. ஸ்லீப் பாராலைசிஸ் கூட இரவில் தூக்கத்தில் பற்களை கொறிக்க வைக்கும்.
* புகை மற்றும் மது : புகையிலை பயன்பாடு மற்றும் மது அருந்தும் பழக்கம் கூட, தூக்கத்தில் பற்களைக் கொறிக்கத் தூண்டும் காரணிகளுள் ஒன்றாகும்.
* காப்ஃபைன் : காப்ஃபைன் நிறைந்த பானங்களான டீ மற்றும் காபியை ஒருவர் அதிகமாக குடித்தால், அதுவும் தூக்கத்தில் பற்களைக் கொறிக்க வைக்கும்.
அறிகுறிகள்
தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தின் தீவிர நிலை பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதில் இப்பழக்கம் மிகவும் தீவிரமாக இருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அதில் தட்டையாக்கப்பட்ட மற்றும் தேய்ந்து போன பற்கள், பளபளப்பான பற்கள், தாடை தசைகளில் வலி, காது வலி, அடிக்கடி தலைவலி, முகத் தசைகளில் வலி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைத் தடுக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதைத் தடுக்கலாம்.
Comments
Post a Comment