வார ராசிபலன் 04/01/2018 முதல் 10/01/2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)
துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். நீண்ட நாட்களாக இருந்த எதிர்ப்புகள் விலகும். குருவின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு வருவாய் கூடும். கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். துயரம் நீங்கும். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்ல பலன் தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் வரவுக்கேற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.
மேலதிதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் விரும்பியபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் வேளை தவறி உணவுண்ண நேரலாம். அரசியல்வாதிகள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் வருவாயைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கிக் காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூரப் பயணத்தால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சினைகள் குறையும். வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். பெண்களுக்கு எதையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். கலைத்துறையினர் யாரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமை அன்று வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்புடன் இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். குடும்பத்திலிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகள் பல தடைகளைத் தாண்டிச் செயல்பட வேண்டி இருக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கவலை நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்கள் அகலும். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பூர்விகச் சொத்துக்களால் வருமானம் கூடும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். பெண்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியல்வாதிகள் வழக்கத்தை விடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்குத் திருப்தியை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி, சனி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 6, 8
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூரியனின் சஞ்சாரம் அனுகூலமான பலன்களைத் தரும். பணவரவால் மனதிருப்தி உண்டு. புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10-ல் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
தொழில், வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதிநிலைமை சீர்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கலைத்துறையினர் உணர்ச்சிகரமாகப் பேசி மற்றவர்களை ஈர்ப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
Comments
Post a Comment