வேலை வரும் வேளை 09: மத்திய அரசுப் பணிக்குக் குறிவையுங்கள்


ணினி அறிவியல் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியராக ஆசைப்படுகிறேன். அடுத்து, பி.எட். படிக்கலாமா. ஆனால், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு பி.எட். படித்தால் வேலை கிடைக்காது என்கிறார்கள். நான் என்ன செய்யலாம்?
- ஐஸ்வரியா ரத்னகிரி
பொதுவாகக் கணினி படிப்புகளைப் படித்தவர்கள் தனியார் துறையில் மென்பொருள் பிரிவில் பணிவாய்ப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் படிக்கிறார்கள். ஆனால், அந்த அடிப்படையில் மட்டுமே வாய்ப்புகளை அணுகக் கூடாது. இன்று ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை அனைவரும் கணினி பயன்பாட்டை அறிந்துகொள்ளும் விதமாகப் பாடத்திட்டம் மாற்றப்பட்டுவிட்டது.
எல்லாப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆகையால் நீங்கள் பி.எட். முடித்துவிட்டு, டெட் தேர்வெழுதி ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது நெட் / ஸ்லெட் தேர்வெழுதி விரிவுரையாளர் பதவிக்கு முயலலாம்.
கி
ராமப்புறத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் என்னை எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி படிக்கவைத்தார் என்னுடைய தாய். அதன்பின்னர் பி.எட். படித்தேன். ஆனால், டெட்/ டி.ஆர்.பி. எழுத தகுதி இல்லை என்கின்றனர். இதனால், தற்போது தனியார் கல்லூரியில் ரூ.7000 சம்பளத்துக்கு வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். மற்ற பட்டதாரிகள் டி.ஆர்.பி. எழுதுகின்றனர். எனக்கு எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
- வேல்முருகன், சேலம்.
பட்டதாரி ஆசிரியர் என்ற வட்டத்தை உங்களுக்கு நீங்களே போட்டுக்கொண்டு தவிக்கிறீர்கள். முதலில் அதைவிட்டு வெளியேறுங்கள். சி.டி.பி.டி. எழுதினால் இந்தியா முழுவதும் உள்ள எந்த மத்திய அரசு, தனியார் பள்ளிகளிலும் பணி வாய்ப்பு பெறலாம். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா, மத்திய அரசு துணை ராணுவ பள்ளிகள் போன்றவற்றுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டும்தான் தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்தின் மத்திய அரசுப் பணிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு அதிகரித்துவருகிறது.
நீங்கள் கேட் தேர்வெழுதி மத்திய அரசு ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பயோ டெக்னாலஜி துறை நடத்தும் பிரத்தியேகமான நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் எழுதலாம். ஆண்டுதோறும் 275 பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகின்றது. கேட்டகிரி – I, கேட்டகிரி – II என இரண்டு பிரிவுகளாக இவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதன்மூலம் நாட்டின் உயரிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் படித்துக்கொண்டே ஜூனியர் ஆராய்ச்சி உதவித்தொகை, சீனியர் ஆராய்ச்சி உதவித்தொகை பெறலாம்.
இல்லையேல் மத்திய, மாநில அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகள், ரயில்வே, வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொண்டு எழுதுங்கள். உங்களுடைய முயற்சியும் பயிற்சியும் சிறப்பாக இருந்தால் உறுதியாக அரசுப் பணி என்ற வெற்றிக் கனி உங்களுக்கே.
னியார் கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். இறுதியாண்டு படிப்பை முடிக்கும் முன்பே நல்ல நிறுவனத்தில் வேலை பெற வேண்டும். இதற்கு என்ன புரோகிராமிங் லாங்குவேஜ் படிக்கலாம். ஆன்லைன் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும். சென்னையா அல்லது பெங்களூருவிலா எங்கு புரோகிராமிங் லாங்குவேஜ் சிறப்பாகக் கற்றுத்தரப்படும்?
- தீபக் சூரியா, சேலம்.
கணினி படிப்பைப் பொறுத்தவரை அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக் காரணமாக புரோகிராமிங் லாங்குவேஜிலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைபெற்றுவருகிறது. நீங்கள் இறுதியாண்டு வருவதற்கு மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் இன்று தொழில்நுட்ப உலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் தொழில் நிறுவனங்கள் திசை திரும்பியுள்ளன. ஆர்ட்டிஃபீஷியல் இண்டலிஜன்ஸ், டேட்டா அனலடிக்ஸ், டேட்டா மைனிங், சைபர் ஃபோரன்சிக், ஹேக்கிங் இப்படி ஏகப்பட்ட புதிய துறைகள் புறப்பட்டுவந்துகொண்டிருக்கின்றன.
ஆன்லைன் குற்றங்களைத் தவிர்க்கவும், அவற்றைக் கண்டுபிடிக்கவும் இன்று ஆயிரக்கணக்கான சைபர் ஃபோரன்சிக் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். அதேபோல இணையதள முடக்கம் அதிக அளவில் நடைபெறுவதால் அவற்றைத் தடுக்க நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கென ஹாக்கதான் நடைபெறுகிறது. மென்பொறியாளர்கள் தங்களின் தனித் திறமைகளை நிரூபிக்க முக்கியமான தளமாக இது கருதப்படுகிறது. எனவே, இவை குறித்த குறுகியகாலப் படிப்புகள், கேமிங் சாஃப்ட் வேர்களை தேடிப் படியுங்கள்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?