வார ராசிபலன் 18/01/2018 முதல் 24/01/2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்களைக் கையாளும்போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்துக்காகப் புதியதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்போது, கவனமாகப் பேசுவது நல்லது. பணி நிமித்தமாகப் பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு, சமையலில் ஈடுபடும்போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு, பெயர், புகழ், கவுரவம் யாவும் தேடி வரும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெறக் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கலைத் துறையினருக்கு, திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள் - சிவப்பு | எண்கள்: 1 - 3 - 9
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். பெண்களுக்கு மனக் கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்துக்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.
கலைத் துறையினருக்கு, பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2 - 3 - 6
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபடக் கடன் பிரச்சினை தீரும். செல்வ நிலை உயரும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினை குறையும். பெண்களுக்கு வழக்கத்தைவிடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும்.
பயணம் செல்ல நேரலாம். கலைத் துறையினருக்கு, கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யத்தால் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பாராட்டு கிடைக்கும். மனக் கவலை ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை - மஞ்சள் | எண்கள்: 5 - 6
பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவி புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் செய்து முடித்து அவர்களின் நன் மதிப்புக்கு ஆளாவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள், கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பெரியவர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை - மஞ்சள் | எண்கள்: 2 - 3 - 6
பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க, துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக, சிறப்பாகப் பணிகளைச் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். பெண்களுக்கு, தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை.
லாபம் உண்டாகும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம். உழைப்புக்கான ஊதியம் சற்றுக் குறைவாகக் கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள் அதீத கவனத்துடன் செயல்படுவதால் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். மனதுக்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1 - 3 - 9
பரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லாப் பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றிபெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கான முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்துவிடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். வாகன யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும்போது தீர ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5, 6
பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.
Comments
Post a Comment