பெண்கள் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
பெண்கள் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
இன்று பெண்கள் யாரையும் சாராமல் வாழும் சூழல் உருவாகியுள்ளது. சமுதாயத்தில் மெதுவாக தோன்றியுள்ள இம்மாற்றம் பல்வேறு துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. தற்போது, ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுக்கென சொத்துகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆர்வம் மட்டும் போதுமா, பெண்கள் சொத்து வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை என்ன?
திட்டமிடுதல்
ஒரு சொத்தை வாங்கும்போது அது தற்போதைய பயன்பாட்டிற்காகவோ, வருங்காலத்திற்காகவோ எப்படியிருந்தாலும் அதற்காக உங்கள் காலம், பணம், முயற்ச்சி என கணிசமாக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.
எனவே பொறுமையாக இருங்கள், ஒரு முதலீடு பயனுள்ளதாகவும் திருப்திகரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய நன்கு திட்டமிடுங்கள்.
பெரும்பாலும் வீட்டு கடன் வாங்குபவர்கள் விற்பனையாளர்களின் கவர்ச்சி விளம்பரங்களால், ஆசை காட்டும் பேச்சுக்களால், அபராத தொகை, வட்டி விகிதம், மாறுபடும் வட்டி போன்றவற்றை சரி வர தெரிந்து கொள்ளாமல் இறுதியில் வாங்கிய கடனை இரு மடங்காக திருப்பி தரும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே, எதிர்காலத்தில் எதிர்பாராமல் திடீர் செலவுகள் வந்தாலும் உங்களால் சமாளிக்கக்கூடிய வகையில் இருக்கும் வீட்டுக் கடன் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
வீட்டு கடனுக்கான நிதி நிறுவனத்தை தேர்வு செய்தற்க்கு முன் கீழ்கண்ட அம்சங்களை ஆராய்ந்த பின் கடனுக்கு விண்ணப்பிப்பது நல்லது:
1. வட்டி விகிதம்
2. செயலாக்க கட்டணம்
3. கடன் ஒப்புதல் காலம்
4. அபராதம் மற்றும் தாமதமாக பணம் செலுத்துவதற்க்கான அபராதம்
5. மாறுபடும் கடன் விதிமுறைகள் மற்றும் முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம்
பாதுகாப்பான இடம்
வீட்டை வாங்கும் போது அது பாதுகாப்பான இடத்தில் இருப்பது அவசியம். வீட்டை வாங்க ஆய்வு செய்யும் போது நீங்கள் குடியேற விரும்பும் பகுதியின் பின்னணியை ஆராய வேண்டும். அருகில் குடியிருப்பவர்களிடமிருந்து அந்த பகுதியின் பாதுகாப்பைப் பற்றி விசாரிக்க வேண்டும். குற்றப் பின்னணி கொண்ட இடங்களாக இருந்தால் அவற்றை தவிர்த்தல் நலம்.
உங்கள் புதிய வீடு அமைந்திருக்கும் பகுதி நல்ல வெளிச்சத்துடன் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். இருண்ட பகுதியில் அமைந்திருக்கும் இடங்கள் அல்லது வீடுகளை தவிர்க்கவும்.
வல்லுநரின் பரிந்துரை
ஒரு சொத்தை இறுதி செய்வதற்கு முன் கட்டுமான துறையில் இருக்கும் வல்லுநரிடம் விவாதித்து பின்னர் அவர் பரிந்துரைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. அந்த இடம் குடியிருப்பு கட்டுமானத்திற்கு ஏற்றதா, நிலத்தின் தன்மை என்ன என்பதையும் விசாரித்துக் கொள்ள வேண்டும்.
கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மை
மனை வாங்கி வீடு கட்டுபவர்களை விட கட்டுமான நிறுவனங்கள் மூலம் வீடு வாங்குபவர்களும், ஜாயிண்ட் வென்ச்சர் மூலம் வீடு கட்டிக்கொள்பவர்களும் அதிகம். தனி வீடு கட்டிக்கொடுக்கும் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகளை சரியாக கையாளாமல் போகலாம். இதனால் கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் திட்டத்தை செயல்படுத்தும் முன் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அவர்கள் இதற்கு முன் மேற்கொண்ட திட்டங்களை நல்ல தரத்துடனும் இருந்ததா, சரியான நேரத்தில் முடிந்ததா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவும்.
குறிப்பிட்ட நிறுவனம், ஏற்கெனவே கட்டி முடித்த திட்டங்களுக்கு சென்று பார்வையிடலாம். அதன் தரத்தை தெரிந்து கொள்ளலாம். முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களை தவிர்ப்பது நல்லது.
போக்குவரத்து வசதி
அடிப்படை வசதிகள் அருகாமையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், நகரத்தின் பல்வேறு இடங்களுக்கான போக்குவரத்து வசதி நன்றாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். நீங்கள் அன்றாடமோ அல்லது அடிக்கடி பயணிக்கும் பகுதிகளுக்கு பொது போக்குவரத்து மூலம் எளிதில் சென்று வர இயல வேண்டும். அல்லது அதற்கான இணைப்பு சாலை வசதி நன்றாக இருக்க வேண்டும்.
கட்டுமான செலவு
கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து ஏறி வரும் சூழலில், வீட்டுக்கான கட்டுமானச் செலவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்கலாம். அதே சமயத்தில் தரத்திலும் சமரசம் இருக்கக்கூடாது. உதாரணத்துக்கு டைல்ஸ், மார்பிள்ஸ் என்றெல்லாம் போடவேண்டாம்; ரெட் ஆக்சைடு போட்டாலே போதும். தரை, வழவழப்பாக இருக்கும். சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில் சுவருக்குப் பெயின்டுக்குப் பதில் தார் அடிக்கலாம். பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். இப்படி கட்டுமான நிறுவனம், பொறியிலாளர்களுடன் கலந்தாலோசித்து, வீண் செலவுகளைக் குறைக்கலாம்.
திட்டங்கள்
இன்று பெண்கள் சொத்துக்களை வாங்குவதற்க்கு ஏதுவாக, அரசாங்கம், வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளன. அப்படி பெண்கள் சொத்து வாங்குவதற்க்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில திட்டங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
• பாரத் ஸ்டேட் வங்கியின் ஹெர் கர் (Her Ghar)
• எச்.டி.எஃப்.சியின் விமன் பவர் (Women Power)
• ஆஸ்பைரின் மஹில ஆவாஸ் கடன் (MALA)
• டாடா ஹவுசிங்
• மைக்ரோ ஹவுஸ் ஃபினான்ஸ் கார்ப்பரேஷனின் வீட்டு மானியம்
• பிரதமரின் அனைவருக்கும் வீட்டு திட்டத்தில் மானியம்
• முத்திரைத்தாள் வரியில் சலுகை.
Comments
Post a Comment