மாங்கல்ய பலம் அருள வடசாவித்ரி விரதம்


வடசாவித்திரி விரதம் என்றவுடன் வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுபோல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும். வடம் என்றால் கயிறு என்றும் பொருள். நம்ம ஊர்ல காரடையான் நோன்பு என அனுஷ்டிப்பதைதான் வட நாட்டில் 'வட சாவித்திரி விரதம்' என அனுஷ்டிக்கின்றனர். ஆண்டுதோறும் கோடைகால பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது. வட நாட்டு பெண்கள் விரதம் இருந்து ஆலமரப்பூக்களை சாப்பிடுவார்கள்.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பவுர்ணமி அன்று பெண்கள் வழிபாடு நடத்தும் சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும், மனதுக்கினிய கணவர் வாய்ப்பார். பாலுள்ள மரங்களெல்லாம் சந்திரன் மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்றதாகும். ஆலமரத்தின் விழுதுகள் அந்த மரத்தை பல நூற்றாண்டுகளுக்கு தாங்கி நிற்கும் ஆற்றலை கொண்டது. ஆலமரம் சுக்கிரனின் காரகம் பெற்றதென்றாலும் விழுதுகள் மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும்.

ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும். எனவேதான் ஆலமரத்தை கேதுவின் ஆதிபத்யம் நிறைந்த மக நக்ஷத்திரகாரர்கள் வணங்க வேண்டிய விருஷமாக அமைந்திருக்கிறது போலும். தற்போது கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி நக்ஷத்திரத்தில் பயணிக்கும் சுக்கிரபகவான் கும்பத்திலுள்ள கேதுவின் மூன்றாம் பார்வையும் பெற்று நிற்பதால் ஏற்படும் மாங்கல்ய தோஷம் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்க இன்று வட சாவித்திரி விரதம் அனுஷ்டிப்பது சிறந்ததாகும். தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் ஆலமரம் ஸ்தல விருட்சம் ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர். இந்த ஊரில் இறைவன் இறைவி மற்றும் ஸ்தல விருஷமான ஆல மரத்தை வணங்கினால் மாங்கல்ய பலம் பெருகும்.


Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?