இது ஆபாசம் இல்ல அவசியம் ஆணுறுப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த செயல்களை தெரிஞ்சு தான் செய்யறீங்களா?
ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்? நீங்கள் அதன் ஆரோக்கியத்திற்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் ஒரு சில தவறுகளும், கவனக்குறைவுகளும் தான் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக இருக்கிறது. இந்த பகுதியில் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில செயல்களை பற்றி காணலாம்.


சுறுசுறுப்பான வாழ்க்கை
ஆய்வுகளில் தினமும் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் மற்றும் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யும் ஆண்கள் பாலியல் ரீதியாகவும், விறைப்பு தன்மை விஷயத்திலும் மற்றவர்களை விட மேம்பட்டவர்களாக இருக்கிறார்களாம்.
புகைப்பிடித்தல் :
பிரிட்டிஷ் நாளிதள் ஒன்று நடத்திய ஆய்வில், புகைப்பிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு விறைப்பு தன்மையில் நல்ல மாற்றம் ஏற்படுவது பற்றி கண்டறியப்பட்டுள்ளது.
வாய் சுத்தம்
விறைப்பு தன்மையில் பிரச்சனை உள்ள ஆண்கள் பலருக்கு பல் ஈறுகளில் பிரச்சனை இருக்கிறதாம். இதற்கு காரணம், வாயில் உள்ள பாக்டிரியாவானது உடலுக்குள்ளும் பயணித்து, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையதாம்.
போதிய தூக்கமின்மை
நீங்கள் உடலுக்கு போதுமான அளவு ஓய்வை கொடுக்கவில்லை என்றால், உங்களது டெஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். இதனால் உங்களது சதை மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. இந்த அனைத்து விஷயங்களுமே உங்களது ஆணுறுப்பை ஏதேனும் ஒரு வழியில் பாதிக்கும்.
Comments
Post a Comment