கிராமத்து கருவாட்டு தொக்கு

உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.
இங்கு கிராமத்து கருவாட்டு தொக்கு சமையலை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Village Style Karuvadu Thokku Recipe
தேவையான பொருட்கள்:
கருவாடு - 10 துண்டுகள்
பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, கருவாட்டை சேர்த்து மசாலாவுடன் சேர்த்து 5-6 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், கிராமத்து கருவாட்டு தொக்கு ரெடி!!!

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?