உள்ளாடைகளை துவைத்த பிறகு ஏன் அயர்ன் செய்து உடுத்த வேண்டும் என தெரியுமா?
வெளிநாடுகளில் துணிகள் துவைக்க பொது வாஷிங் மெஷின் இடங்கள் இருக்கும். அங்கே சென்று நீங்கள் துவைக்க எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும், துணிகளின் எடைகளுக்கும் நீங்கள் பணம் கொடுத்து துவைத்து வரலாம். இது போன்ற சிஸ்டம் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும் நாம் காண முடியும்.
இது போன்ற இடங்களில் அதிகப்படியானோரின் உடைகள் ஒரே மெஷினில் துவைக்கும் வழக்கம் இருக்கும். இவர்கள் ஒரு வாரத்திற்கு ஓரிரு முறை தான் வாஷிங் மெஷின்களை சுத்தம் செய்வார்கள். ஆகையால் உங்கள் உடைகளில் கிருமிகளின் தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
நிபுணர்கள்!
சுத்தம் மற்றும் சுகாதாராம் சார்ந்த நிபுணர்கள் நமது வீட்டின் வாஷிங் மெஷினாக இருந்தாலுமே கூட, அதிகப்படியான உடைகளை ஒரே நேரத்தில் துவைக்க கூடாது. அதே போல, உள்ளாடை, வெளியாடைகளை தனித்தனியாக துவைக்கும் பழக்கம் கொண்டிருக்க வேண்டும் என அறிவுரைக்கிறார்கள்.
ஒருசிலருக்கு அந்தரங்க உறுப்புகளில் தொற்று இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அவர்களின் உள்ளாடைகளில் இருந்து நோய் கிருமிகள் மற்றவருடைய உடைகளிலும் பரவும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.
நோய் தொற்றுகள்!
ஈஸ்ட் மற்றும் ஃபங்கல் தொற்றுகள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களது உள்ளாடைகளை தனியாக துவைக்கும் பழக்கம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இல்லையேல், ஈரப்பதத்தில் கிருமிகள் அதிகளவில் பற்றவருடைய ஆடையில் பரவ வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும், ஈஸ்ட் தொற்று இருக்கும் பெண்கள் தங்கள் உள்ளாடை சுகாரத்தில் அக்கறையாக இருக்க வேண்டியதும் அவசியம்.
ஏன் அயர்ன் செய்ய வேண்டும்?
துணி துவைப்பதால் மட்டும் உங்கள உள்ளாடைகளில் இருந்து கிருமிகள் மொத்தமாக நீங்கிவிடாது. உள்ளாடை துவைத்து நல்ல வெயில் படும் இடத்தில் காய வைக்க வேண்டும்.
மேலும், ஈஸ்ட் போன்ற தொற்று உள்ளவர்கள் துணை காய்ந்த பிறகு உபயோகிக்கும் முன்னர் அயர்ன் செய்து உடுத்துவதால் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறுகிறார்கள்.
சூரிய ஒளி!
முக்கியமாக கூச்சம் காரணமாக சிலர் உள்ளாடைகளை பாத்ரூம்களில் காய வைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகவும் தவறு, சூரியனின் வெயில் படும் இடத்தில் காயவைத்து பழகுங்கள். இதனால் முற்றிலும் ஆடைகளில் அண்டியிருக்கும் கிருமிகள் அழிக்கப்படும்.
Comments
Post a Comment