உங்களை தாழ்வாக நினைக்கும் உறவுகளை சமாளித்து, தவறை உணர வைக்க சில யோசனைகள்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
வாழ்க்கையில் நம்மை குறைத்து எடை போடவும், நாம் செய்யும் செயல்களை பழி கூறவும், கேலி, கிண்டல் செய்யவுமே பலருக்கு நேரம் இருக்கிறது.. நம்மை ஊக்கப்படுத்துவும், நமக்கு வழிகாட்டவும் யாரும் பலர் விரும்புவது இல்லை.. வீடு, அலுவலகம் என எங்கு பார்த்தாலும் குறை கூறிக் கொண்டு இருப்பவர்கள் தான் அதிகம்.
உன்னால் முடியும் என்று ஒருவர் சொன்னால், உன்னால் இது எல்லாம் முடியவே முடியாது.. வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருனு சொல்ல 10 பேர் ஆவது நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.. அதே சமயம் வாழ்க்கையில் நாம் முன்னேறவில்லை என்றாலும் அதையும் கேலி, கிண்டல்கள் செய்ய 10 பேர் இருப்பார்கள்...!
இன்று நமக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை நமது மனது என்ன சொல்கிறது, நம்மால் என்ன முடியும் என்று நம்மை நாமே சுய பரிசீலனை செய்து கொள்ளாமல், அடுத்தவர் நம்மால் முடியாது என்று கூறினால், அதனை நினைத்து துவண்டு போய்விடுவது தான்...! இது போன்று உங்களை குறைத்து எடை போடும் மக்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்..
உன்னால் முடியாது!
ஒருவர் உன்னால் இந்த காரியத்தை எல்லாம் செய்ய முடியாது என்று கூறினால், நீங்கள் யார் என்னால் இது முடியாது என்று கூறுவதற்கு, என்னால் என்ன முடியும், என்ன முடியாது என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். என்று கூறுங்கள்.. உங்களது மனதிலாவது இந்த எண்ணம் இருக்க வேண்டியது அவசியம். அதே சமயத்தில் அவர்கள் பலர் முன்னால் உன்னால் முடியாது என்று கூறிய காரியத்தை திறம்பட செய்து காட்டுங்கள்.. குறைந்த பட்சம் அதற்கான முயற்சியிலாவது இறங்குங்கள்...!
உடை
ஆள் பாதி ஆடை பாதி என்பது மிகவும் உண்மையான விஷயம். பெரும்பாலும் உங்களது உடையே உங்களது தன்னம்பிக்கையையும், மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள நம்பிக்கையையும் தீர்மாணிக்கிறது. எனவே எப்போதும் ஸ்மார்ட்டான உடைகளை அணியுங்கள். நிமிர்ந்த நன்நடையும், நேர்க் கொண்ட பார்வையும் இருப்பதும் அவசியமாகும். வேலை செய்ய கூடிய திறமையை வளர்த்துக் கொண்டே போக வேண்டியது அவசியமாகும்.
புதிய பொருப்புகள்
புதிய பொருப்புகள் உங்களை தேடி வரும் போது, நான் இந்த பொருப்பிற்கு முழுமையாக தகுதியானவன். என்னால் இந்த பொருப்பை ஏற்றுக் கொண்டு திறம்பட செய்ய முடியும் என்று தைரியமாக சொல்லுங்கள். அதே சமயத்தில் உங்களது வேலை செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமானதாகும். என்னால் எது முடியும் முடியாது என்பதை நீங்கள் தவறாக கணக்கிட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று கூறுங்கள்...!
கவனம்
கவனம்நீங்கள் செய்த எந்த விஷயம், மற்றவர்கள் உங்களை தவறாக எடை போடுவதற்கு காரணமாக இருந்தது என்பதை யோசித்து பாருங்கள்.. அந்த விஷயங்கள் நியாயமானதாக இருந்தால் அந்த தவறுகளை நீங்கள் மறுபடியும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களது மனதிற்கு நியாமாக படும் விஷயங்களை தைரியமாக வெளிப்படுத்தலாம்.
ஏன் தோல்வி அடைந்தாய்?
நீ சொல்வது எல்லாம் சரி, இப்படி இருக்க இதற்கு முன்னர் நீ செய்த விஷயங்களில் ஏன் தோல்வி அடைந்தாய் என்ற கேள்வி உங்களது பக்கம் கண்டிப்பாக வர தான் செய்யும். எனவே தோல்விக்கான காரணங்களை விவாதித்துக் கொண்டிருக்காமல், நான் சந்தித்த தோல்விகளை கொண்டு என்னை எடை போடுவது தவறு.. நான் நிச்சயம் வெற்றியடைவேன் என்று கூறுங்கள்..!
சாதகமாக பயன்படுத்துங்கள்!
மற்றவர்கள் நம்மை புகழ்ந்தால் எப்போதுமே நாம் பல சமயங்களில் நாம் தாழ்ந்து போய்விட கூடும். எனவே மற்றவர்கள் உங்களை குறைவாக எடை போடுவதை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. என்னை குறைத்து பேசிவிட்டான், அவனுக்கு நான் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று தொடந்து கடுமையாக போராடுங்கள்..
வெற்றி கனி
உங்களை தாழ்வாக பேசியவர்கள் முன்னிலையில் நீங்கள் வெற்றியடைந்து காட்டுவதை காட்டிலும், வேறு ஒரு நல்ல பதிலை அவர்களுக்கு தரவே முடியாது.. உங்களை குறைத்து பேசியவர்கள் முன்பு மட்டும் நீங்கள் வெற்றி பெற்று காட்டுவது என்பது அமைதியான முறையில் அவர்கள் செய்த தவறுக்காக அவர்களை வருத்தப்பட வைக்கும். எனவே எப்போதும் உங்களை குறைத்து எடை போடுபவர்களுக்கு முன்னால் வென்று காட்டுங்கள்..
மதிக்காதீர்கள்..
உங்களது தரத்தை குறைவாக நினைப்பவர்கள் எப்போதும் நின்று பேசாதீர்கள். உங்களை பற்றி கடுமையாக விமர்சனம் செய்பவர்களை தாண்டி சென்று கொண்டே இருங்கள்.. அவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதிலானது நீங்கள் பெற்ற வெற்றியால் ஆனதாக தான் இருக்க வேண்டும்.
விளையாட்டாக பேசுதல்
பல சமயங்களில் பலர் உங்களிடம் விளையாட்டாக பேசுவது போலவே உங்களது மனதை காயப்படுத்துவது போல பேசுவார்கள்.. அவர்களது போக்கிலேயே சென்று அவர்களுக்கு பதிலடி கொடுப்பது தான் நியாமான ஒன்று.. அப்போது தான் அவர்கள் உங்களது வழிக்கு வரமாட்டார்கள்.
நச்சு தன்மை உடைய மனிதர்கள்
எப்போதும் நீங்கள் நச்சுத்தன்மை உடைய மனிதர்களிடத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டியது அவசியம். அவர்களுடன் பேசி உங்களது நேரத்தை வீணடிப்பதோடு, உங்களது மனதையும் காயப்படுத்திக் கொள்வது வேண்டாம். துஷ்டணை கண்டால் தூர விலகு என்பது போல, இது போன்ற மனிதர்களிடம் இருந்து விலகி சென்று விடுங்கள்.
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும். சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். காரணங்கள் ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன: * மனக்கவலை : அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது. * மருந்துகள் : சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தை...
இன்றைக்கு உணவகங்களுக்குச் சென்று இரவு உணவு சாப்பிடும் பெரும்பாலோரின் விருப்ப உணவாக இருப்பது பரோட்டா அல்லது புரோட்டா. நமது ஊர் பகுதிகளில் தான் எத்தனை வகையிலான பரோட்டாக்கள்....! மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா... எனப் பல வகைகள் காணப்படுகின்றன.. அப்படியே கொஞ்சம் கீழே வந்தால், இலங்கை பரோட்டா' என்று மற்றொரு வகை பரோட்டா காணப்படுகிறது. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் கிடைக்கின்றன. பல பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த எல்லா வகையான பரோட்டாக்களும் கிடைக்கின்றன. ஏன் ஒரு சின்ன ஹோட்டலிலும் கூட குறைந்தது மூன்று வகையான பரோட்டாக்கள் கிடைக்கின்றன.. நாம் விரும்பி சாப்பிடும் இந்த பரோட்டா ஆரோக்கியமானது தானா? மைதா என்பது என்ன? இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது ‘வெள்ளை கோதுமை' என்றழைக்கப்படும் மைதா.கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டத...
சுத்தியும் மலை.... நடுவுல சின்ன குடிச வீடு அங்க நீயும் நானும் மட்டும். மழை எப்பவும் தூரிக்கிட்டே இருக்கணும் பக்கத்துல ஒரு பொட்டிக்கட கூட இருக்கக்கூடாது. ஆறு ஏழு கிலோமீட்டர் நடந்து தான் பால் வாங்க கூட போகணும். பக்கத்துல எந்த வீடும் இல்ல நம்ம வீடு மட்டும் தான் இப்படி இருந்தா எப்டி இருக்கும் என்று கண்ணைச் சிமிட்டி அவள் கேட்கும் போதே முகத்தில் நாலு அறை விடலாம் அளவுக்கு கோபம் வரும். என்ன செய்ய காதலித்து தொலைக்கிறேனே.... சூப்பர் பேபி எப்டி உனக்கு இப்டி எல்லாம் தோணுது என்று கொஞ்ச வேண்டிய நிலைமை. இந்த காதலிகள் எப்போ குழந்தையாய் மாறுவார்கள், எப்போ மனைவி ரோலை எடுப்பார்கள், எப்போது பத்திரகாளி அவதாரம் எடுக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்ககூட முடியாது. நொடிப்பொழுதில் அந்த மாற்றங்கள் நிகழும். பேருந்து நிலையம் : நான் பி.இ படித்து எம்.பி.ஏ படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எவனோ ஒருவன் என் அப்பா காதில் ஓத அதையும் படித்து முடித்து இரண்டு வருடங்கள் வேலையில்லாமல் சுற்றி கடைசியாக நண்பன் ஒருவன் மூலமாக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கிடைத்து செல்ல ஆரம்பித்திருந்தேன். ...
Comments
Post a Comment