வேலை வேண்டுமா? - சீருடைத் துறைப் பணிகள்


காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய சீருடை சார்ந்த துறைகளுக்குப் பணியாளர்களைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்க இருக்கிறது.

ஒருங்கிணைந்த தேர்வு

அந்த வகையில், சீருடைப் பணியாளர் தேர்வாணையமானது இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பவர் ஆகிய பதவிகளில் 6,140 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்பும் வகையில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. மூன்று வகைப் பணிகளுக்கும் ஒரே தேர்வுதான். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இந்த ஒருங்கிணைந்த தேர்வுக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, இதர திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அறிவிக்கப்பட்டுள்ள மொத்தக் காலியிடங்களில் 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுமுறை

எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண், உடல் திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண், இதர திறமைகளுக்கு (என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு) 5 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் பொது அறிவு (50 மார்க்), உளவியல் (30 மார்க்) ஆகிய பகுதிகளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தடுத்த தேர்வுகளில் கலந்துகொள்ள முடியும். எழுத்துத் தேர்வில் இருந்து, ‘ஒரு காலியிடத்துக்கு 5 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்த நிலைத் தேர்வான உடல்கூறு தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மொத்த மதிப்பெண், விண்ணப்பதாரரின் பணி முன்னுரிமை, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.
தகுதியுடையோர் www.tnusrbonline.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தை நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். அவ்வாறு செலுத்த இயலாதவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு அஞ்சலகங்கள் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
முக்கியத் தேதிகள்
# ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 2018 ஜனவரி 27
# அஞ்சலகம் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் - 2018 ஜனவரி 31
# எழுத்துத் தேர்வு - 2018 மார்ச் அல்லது ஏப்ரல்.
காலியிடங்கள் விவரம்
# இரண்டாம் நிலைக் காவலர் - 5,538
# இரண்டாம் நிலை
# சிறைக்காவலர் - 365
# தீயணைப்பவர் - 237

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?