குறிப்புகள் பலவிதம்: சளியை விரட்டும் சின்ன வெங்காயம்


  • எந்தவகை கீரைப் பொறியல் செய்தாலும் வதக்கும்போது இரண்டு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்தால் ருசி அதிகமாவதுடன் பச்சை நிறமும் மாறாது.
  • பழுத்த, தோல் கறுத்த பழங்களை வீணாக்காமல் மசித்து கோதுமை மாவு, சர்க்கரை, சிறிதளவு சமையல் சோடா சேர்த்துத் தண்ணீர் விட்டு எண்ணெய்யில் போட்டுப் போண்டாவாகப் பொரித்தெடுத்துச் சாப்பிடலாம்.
  • கற்பூர டப்பாவில் பத்து மிளகுகளைப் போட்டுவைத்தால் கற்பூரம் காற்றில் கரையாது.
  • பாத்திரம் தேய்க்கும் சிங்க், வாஷ்பேசின், வீட்டின் மூலை முடுக்குகளில் குழந்தைகள் எடுக்காத வகையில் பாச்சை உருண்டைகளைப் போட்டுவைத்தால் கரப்பான் போன்ற பூச்சிகள் வராது.
  • டீத்தூளுடன் கொஞ்சம் ஏலக்காயைத் தட்டிப்போட்டுக் கலந்துவைத்தால் டீயின் மணம் தூக்கலாக இருக்கும்.
  • மார்கழி மாதம் கோலம் போடும்போது கலர் பவுடருடன் சலித்த மணலைக் கலந்து போட்டால் கோலம் எடுப்பாக இருக்கும்.
  • தினம் ஒரு சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துச் சாப்பிட்டுவந்தால் சளி பிடிக்காது.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?