பொங்கல் வைக்கும் நேரம்!
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பான தை மாதமே, பொங்கலாக கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு இந்த முறை, நாளைய தினம் 14.1.18 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலையில்தான் பிறக்கிறது. ஆகவே நாளை மாலை 4 மணிக்கு பொங்கல் வைக்க உகந்த நேரம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
மாலை 4 மணிக்குப் பிறகும் வைக்கலாம். ஆனால், 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம் என்பதால், மாலை 4 மணிக்கு பொங்கல் வைப்பதே சிறப்பானது என்று தெரிவிக்கிறார்.
கணு பொங்கல் நேரம்!
சகோதரர்கள் நலமாகவும் வளமாகவும் பலமாகவும் இன்னும் இன்னும் பிரியத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் வழிபடும் கணு பொங்கல் சடங்கானது, பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படுகிறது. அதாவது ஜனவரி 15ம் தேதி திங்கட்கிழமை. பொதுவாக, சுக்கிர ஓரை பார்த்து, கணு பொங்கல் வைப்பது, மிகுந்த பலன்களைத் தரக்கூடியது என்கிறார் பாலாஜி வாத்தியார்.
15ம் தேதி திங்கட்கிழமை காலை 5.40 முதல் 6.40 மணி வரை சுக்கிர ஓரை. இந்த நேரத்தில் கணு பொங்கல் வழிபாடு செய்யலாம் என்கிறார்.
மேலும் இந்த நாளில், கோ பூஜை செய்வது சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். கோபூஜை செய்ய இயலாதவர்கள், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கி வழிபடலாம்!
Comments
Post a Comment