'டைட்டானிக்' நாயகனாக முதலில் நடித்தவர் யார் தெரியுமா?
டைடானிக் படத்தில் கேட் வின்ஸ்லெட் - டிகேப்ரியோ
'டைட்டானிக்' படத்தின் மூலம் புகழடைந்தவர்கள் படத்தின் நாயகன் நாயகியாக நடித்த லியார்னடோ டி கேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட். இவர்களின் ஜாக் - ரோஸ் கதாபாத்திரம் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இரண்டு கதாபாத்திரமும் பிரசித்தி பெற்றது.
ஆனால் முதலில் ஜாக் கதாபாத்திரத்தில் நடிக்க மாத்யூ மெக்கானகே என்ற நடிகர் தான் தேர்வு செய்யப்பட்டிருந்தாராம். இந்த ரகசியத்தை கேட் வின்ஸ்லெட் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டுடைத்தார்.
'டைட்டானிக் படம்' வெளியான 20-வது வருடத்தை முன்னிட்டு, படத்தின் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வடிவம் மீண்டும் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "இதை நான் பொதுவெளியில் சொன்னதில்லை. நான் முதலில் ஆடிஷன் (கதாபாத்திரத்துக்கான நடிப்பு தேர்வு) செய்தது மாத்யூவுடன் தான். வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? அது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவர் நடித்திருந்தால் ஜாக் - ரோஸ், கேட் - லியோ என்று ஆகியிருக்க முடியாது அல்லவா!
மாத்யூ
ஏனென்றால், படத்தை தயாரித்த பாராமவுண்ட் நிறுவனத்துக்கு பிடித்தமான நடிகர் (மாத்யூ) அவர். ஆனால் ஜேம்ஸ் கேமரூன் தான் டி கேப்ரியோ அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்" என கேட் வின்ஸ்லெட் குறிப்பிட்டார்.
ஆஸ்கர் விருது பெற்றுள்ள மாத்யூ மெக்கானகே 'இண்டர்ஸ்டெல்லார்', 'தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்', 'டாலஸ் பையர்ஸ் க்ளப்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
Comments
Post a Comment