இதெல்லாம் சமைக்காம சாப்பிடவே கூடாது! எச்சரிக்கை

ஆரோக்கியமான பிரெஷ் காய்கறிகளை சாலட் போல் தொடர்ந்து சாப்பிட்டு வருபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது, தொடர்ந்து படியுங்கள்.
தொடக்க காலம் முதல் மனிதர்கள் இறைச்சி, போன்ற சில வகை உணவுகளை வேக வைத்து சமைத்து சாப்பிட பழகியுள்ளனர். இதனால் அதன் சுவை அதிகரிக்கிறது. மேலும் அந்த உணவின் கடின தன்மை மறைந்து ரு வித மென்மை கிடைக்கிறது. ஆனால் சில உணவுகளை நாம் பல காலமாக பச்சையாக வேகவைக்காமல், சமைக்காமல், பொறிக்காமல், பேக் செய்யாமல் சாப்பிட்டு வருகிறோம்.
உதாரணத்திற்கு, பழங்கள், சில வகை காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள், பால் போன்றவை ஆகும். இப்படி சமைக்காமல் பச்சையாக சில வகை உணவுகளை உட்கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் உடலுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, சில வகை உணவுகள் பச்சையாக உண்ணும் போது உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் தோன்றும்.
9 foods you should never eat raw
மனித உடல் ஆரோக்கியம் என்பது விலைமதிப்பற்றது. ஆகவே, நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக சில பழக்கங்களை தவிர்க்க வேண்டுமாயின், அவற்றை தவிர்த்து விடுவது நல்லது. இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. பச்சையாக உட்கொள்ளகூடாத சில உணவு பட்டியலை இப்போது நாம் காண்போம்.

உருளைகிழங்கு:

உருளைகிழங்கு:

வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை நாம் பச்சையாக உட்கொள்வோம். ஆனால் எல்லா காய்கறிகளையும் அப்படி உண்ணுவது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
அப்படி ஒரு காய், உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு ��ன்பது பிரபலமான ஒரு உணவு வகை. இதனை பயன்படுத்தி பல உணவு பதார்த்தங்கள் சமைக்கப் படுகின்றன. உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணுவதால் வாய்வு பிரச்சனை உண்டாகிறது. செரிமான கோளாறு, தலைவலி, குமட்டல், போன்றவை உண்டாகின்றன. இதற்கு காரணம், பச்சை உருளைகிழங்கில் இருக்கும் சொலனின் என்னும் நச்சுப்பொருள்.
வேக வைக்கும்போதும், சமைக்கும்போது நச்சு பொருள் வெளியேறி உண்ணுவதற்கு ஏற்ற வகை உணவாக இது மாற்றம் பெறுகிறது.
ராஜ்மா :

ராஜ்மா :

ராஜ்மா என்பது ஒரு ஆரோக்கியமான பருப்பு வகை ஆகும். இதில் புரதம் மற்றும் அண்டி ஆக்ஸ்சிடென்ட் அதிக அளவில் உள்ளன.
ராஜ்மா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும், வேக வைத்து சமைக்கும்போது தான் நமக்கு கிடைக்கிறது. ராஜ்மாவை வேகவைக்காமல் உண்ணும்போது, குமட்டல், வாந்தி, செரிமான பிரச்சனைகள், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படுகிறது.
இதற்கு காரணம் ராஜ்மாவில் இவற்றை உண்டாக்கும் என்சைம்கள் உள்ளது தான். ஆகவே ராஜ்மாவை உட்கொள்வதற்கு முன், நன்றாக ஊற வைத்து, வேக வைத்து, சமைத்து உண்ணுவது தான் சிறந்த வழி ஆகும்.
தேன் :

தேன் :

தற்போது பெருமளவில் நாம் பயன்படுத்தும் தேன், கடைகளில் வாங்கி பயன்படுத்தும் விதமாகவே உள்ளது. கடைகளில் வாங்கும் தேன் பதப்படுத்தப்பட்டது.
ஆகவே இது பச்சை தேன் அல்ல . ஆகவே இவற்றை வாங்கி உட்கொள்வதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை . ஆனால், சிலர் , ஆர்கானிக் தேன் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்த வகை ஆர்கானிக் தேன் பதப்படுத்தப் படுவதில்லை. ஆகவே இவற்றை பச்சையாக உட்கொள்வது நல்லதல்ல.
இந்த வகை பதப்படுத்தப்படாத தேனில் க்ராய்நோடோக்ஸின் என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம், உணவு ஒவ்வாமை, தலை சுற்றல் போன்றவற்றை உண்டாக்குகிறது .
பால்:

பால்:

தேனை போல், பாலையும் இன்று கடைகளில் தான் நாம் வாங்குகிறோம். ஆகவே கடையில் வாங்கும் பால் பொதுவாக பதப்படுத்தி தான் விற்கப்படுகிறது.
ஆகவே இவற்றை வாங்கி, காய்ச்சி பருகி வருவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இன்று பலர் ஆர்கானிக் உணவில் விருப்பம் கொண்டு, அத்தகைய பால் அல்லது பசும்பாலை நேரடியாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அப்படி பட்டவர்கள், பச்சை பாலைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். காய்ச்சாத பசும்பாலில், நுண் கிருமிகள், ஈ கோலி , சல்மோனெல்லா போன்றவை இருக்கும்.
இவை மனித உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய கேடுகளை உண்டாக்குகிறது. அதனால் பசும்பாலை வாங்கி பயன்படுத்துகிறவர்கள் கட்டாயம் காய்ச்சி பருகுவது அவசியம்.
ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

ஆரோக்கியத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறவர்கள், ப்ரோக்கோலியை பச்சையாக சாலடில் அல்லது உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ப்ரோக்கோலி என்பது நிச்சயமாக ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு தான். அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை.
ப்ரோக்கோலி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு. ஆனால், இதனை பச்சையாக் உண்ணுவதால், இதில் இருக்கும் அதிகமான சர்க்கரைச் சத்து , செரிமான பிரச்னையை உண்டாக்குகிறது. ஆகவே இதனை வேக வைத்து உண்பதால் இதில் இருக்கும் சர்க்கரை அளவு குறைந்து செரிமானத்தை எளிதாக்குகிறது.
ஆலிவ் :

ஆலிவ் :

ஆலிவ் என்பது பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகை. இதன் புளிப்பு சுவை அனைவரையும் ஈர்க்கும்.
இந்த பழம் பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக கடைகளில் விற்கப்படும் ஆலிவ் பதப்படுத்தப்பட்டதாக அல்லது ஊறவைத்ததாக இருக்கும்.
ஆகவே இவை, உண்ணுவதற்கு ஏற்றதாக பாதுகாப்பானதாக இருக்கும். மரத்தில் இருந்து பறிக்கும் ஆலிவை அப்படியே உண்ணுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஒளிரோபின் என்னும் கூறு இந்த பழத்தில் இருப்பதால் , இவற்றை நேரடியாக உட்கொள்ளும்போது புட் பாய்சன் ஏற்படவும் வாய்ப்புண்டு.
காளான் :

காளான் :

தற்போது மஷ்ரூம் எனப்படும் காளான் பலராலும் விரும்பி சுவைக்கப்படும் உணவாக உள்ளது. காளானை பயன்படுத்தி பல்வேறு சுவைமிகு உணவுகளை நாம் தயாரிக்கலாம்.
சமைத்து உண்ணும்போது பாதுகாப்பானதாக இருக்கும் காளான், பச்சையாக உண்ணும்போது பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. காளான் என்பது ஒரு பூஞ்சை வகை என்பதால் இவற்றில் நுண் கிருமிகள் அதிகமாக இருக்கும்.
ஆகவே இவற்றை சமைக்காமல் உட்கொள்ளும்போது பல்வேறு செரிமான கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
பன்றி இறைச்சி :

பன்றி இறைச்சி :

நம்மில் பலர் இறைச்சி வகைகளை சமைக்காமல் உண்ணுவது கிடையாது. ஆனால் சில மக்கள் பன்றி இறைச்சி அல்லது வேறு இறைச்சியை சாலடில் சேர்த்து பச்சையாக உண்ணுவர்.
இந்த பழக்கம் முற்றிலும் ஆபத்தானது. பன்றி இறைச்சி பச்சையாக இருக்கும்போது அதில் நாடாப் புழுக்கள் இருக்கும்.
இந்த வகை புழு, மனித உடலுக்கு பல தீங்குகளை உண்டாக்கும். புட் பாய்சன் அல்லது ஆபத்தான பல்வேறு சிக்கல்கள் சில சமயம் இறப்பையும் இவை உண்டாக்கலாம்.
ஆகவே பன்றி இறைச்சியை கண்டிப்பாக பச்சையாக உண்ணக்கூடாது.வேக வைத்து மட்டுமே உண்ண வேண்டும்.
முட்டை:

முட்டை:

எல்லா மக்களாலும் விரும்பி உண்ணப்படும் உணவு பொருள் , முட்டை. பொதுவாக இதனை பெரும்பாலும் வேக வைத்து பயன்படுத்துவர்.
சில வகை உணவில், மஞ்சள் கருவை மட்டும் பச்சையாக பயன்படுத்தும் பழக்கத்தை சிலர் கொண்டிருப்பர். இதற்கு காரணம் இதன் சுவை தனித்துவமாக இருக்கும்.
இந்த பழக்கம் பல ஆரோக்கிய பிரச்சனைகளை கொடுக்கும். மஞ்சள் கருவை வேக வைக்காமல் பயன்படுத்தும் போது அவற்றில் சல்மோனெல்லா அல்லது வேறு பாக்டீரியா போன்றவை வெளியேறி, பல நோய்களை உண்டாக்கும்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?