கண் திருஷ்டி விலக நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்!

கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று கூறுவார்கள்.. அந்த அளவுக்கு இந்த கண் திருஷ்டிக்கு சக்தி உள்ளது.. ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் உடனடியாக நடந்து விடும்.. ஒரு சிலருக்கு என்ன தான் முயற்சி செய்தாலும் அந்த விஷயம் தாமதமாக நடக்கும். மற்றும் சிலருக்கோ கையில் கிடைத்தது வாய்க்கு எட்டாதது போன்ற நிலைமை உண்டாகிவிடும். இன்னும் சிலருக்கோ என்ன செய்தாலும் ஒரு காரியம் நடக்கவே நடக்காது.
இவை எல்லாம் எதனால் நடக்கிறது.. நமக்கு கிடைக்காத ஒரு பொருள் அல்லது நமக்கு கிடைக்க வேண்டிய ஒன்று மற்றவர்களுக்கு கிடைக்கும் போது பொறாமை, தீய எண்ணங்கள் போன்றவை கண்களின் மூலமாக வெளிப்படுகிறது. இதனையே கண் திருஷ்டி என்று கூறுகிறோம்.
ஒருவர் நீங்கள் அணிந்து செல்லும் புடவையை பார்க்கிறார்.. நன்றாக இருக்கிறது என்று புகழ்கிறார். அந்த புகழ்ச்சியானது உங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இப்படியிருக்க அந்த புடவை அடுத்த நாளே எதிர்பாராத விதமாக கிழிந்து விடுகிறது.. இது போன்று பல விஷயங்களை உங்களது வாழ்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கலாம்..! இது போன்று நடப்பதற்கு எல்லாம் காரணமாக இருப்பது என்னவென்றால் கண் திருஷ்டி தான்.. இதனை நீக்குவது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் தொடந்து காணலாம்.
வாழை மரம்

வாழை மரம்

விசேஷங்களின் போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
Error loading media: File could not be played
 
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்

வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்ப கண்ணாடி, மீன் தொட்டி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.
உப்புக் குளியல்

உப்புக் குளியல்

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க் கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம்

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசி விடவும்.
கடல் நீர்

கடல் நீர்

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
கண் திருஷ்டி நீங்க

கண் திருஷ்டி நீங்க

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க,தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும்.. இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
உப்பு

உப்பு

சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.
கற்றாழை

கற்றாழை

கற்றாழை போன்ற முள் உள்ள தாவரங்களை வீட்டில் வாசலில் கட்டி தொங்க விடுவதாலும் வீட்டிற்குள் தீய சக்திகள் வருவதை தடுக்கலாம். மேலும் ரோஜா போன்ற செடிகளை வீட்டின் வாசலில் வளர்க்கலாம்.
கருப்பு பொட்டு

கருப்பு பொட்டு

மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்து விடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்..அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும் அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...
மஞ்சள், குங்குமம்

மஞ்சள், குங்குமம்

வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்..இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்....
மீன்கள்

மீன்கள்

வீட்டில் சிவப்பு அல்லது கருப்பு நிற மீன்களை வளர்க்கலாம். இதனால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் நீங்கும். மேலும் வீட்டில் மீன்களை வளர்ப்பது என்பது நேர்மறை எண்ணங்களை தூண்டுவதாகவும் இருக்கும்.
பூசணிக்காய்

பூசணிக்காய்

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெள்ர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?