குரூப் 4 தேர்வு: மாவட்ட மைய நூலகத்தில் பிப்.4-இல் மாதிரி தேர்வு

குரூப் 4 தேர்வையொட்டி தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் பிப்.4-இல் நடைபெறவுள்ள மாதிரித் தேர்வில் விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் பொதுநூலகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 60 வகுப்புகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் 50 தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் வரும் பிப்.11-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளதால் அதற்கான மாதிரித் தேர்வு தேவநேயப் பாவாணர் நூலகத்தில் பிப்.4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த மாதிரித் தேர்வை குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள யார் வேண்டுமானாலும் எழுதலாம். விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது விவரங்களை பிப்.2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட மைய நூலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்ய... மாதிரி தேர்வு எழுத விரும்புவோர் நூலகர், மாவட்ட மைய நூலகம், எண் 735, அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-28524765, 7402603516 என்ற தொலைபேசி எண்கள், dclchn@tn.nic.in, thanikadcl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Post a Comment