முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? அப்ப இத செய்யுங்க...
உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? சரும பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? எவ்வளவு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லையா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பிரச்சனைக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரைக்கிறது. அவற்றை எண்ணெய் பசை சருமத்தினர் தினந்தோறும் பின்பற்றினால், நிச்சயம் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.
எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் குளிர் காலத்தை விட கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள். கோடைக்காலம் வர இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. எனவே இப்போது இருந்தே கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென பலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
முக்கியமாக எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பிரச்சனை முகப்பரு தான். அதோடு, முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க ஆரம்பிக்கும். இங்கு இப்பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஆயுர்வேதம் கூறும் சில எளிய தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பயன்படுத்தினால், நிச்சயம் முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பால்
பாலில் உள்ள மருத்துவ பண்புகள், எண்ணெய் பசை சருமத்தினருக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதற்கு பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலையிலும், இரவில் தூங்கும் முன்பும் செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை பசையைத் தடுக்கலாம். அதிலும் பாலுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.
Comments
Post a Comment